விஜய தேவரகொண்டா பேரன்புடன் ஆவலாய் எழுதியுள்ள லவ் லெட்டர் பார்ப்போம்..
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பு வருகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவுதம் டின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கிங்டம்’. இதன் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மே 30-ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், அனிருத்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால், அவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதும் வைரலாகி தெறிக்கிறது. அதில், விஜய் தேவரகொண்டா..
‘நான் ’விஜபி’ மற்றும் ‘3’ பட நாட்களில் இருந்தே அனிருத்தின் பெரிய ரசிகன். யார் இவர், நான் எப்போதாவது நடிகனாகி விட்டால், திரையில் வரும்போது இவருடைய இசை ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
10 வருடங்களுக்கு பின்பு, இப்போது எனது 13-வது படம் 28 நாட்களில் வெளியாகிறது. இது அனிருத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியின் முதல் பாடம். நான் மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
இன்றைக்கு ‘கிங்டம்’ படத்தின் உலகத்தையும், உணர்ச்சிகளையும் உங்களுக்கு காட்டத் தொடங்குகிறோம். அது உங்கள் உலகத்தில் சந்தோஷத்தையும், நினைவுகளையும் கொண்டு வரும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ரசிகர்கள், “லவ் லெட்டர் அவருக்கு மட்டும்தானா? ராஷ்மிகா வருத்தப்படப் போகிறார்” என குறும்புத்தனமாக கேட்டு வருகின்றனர்.