Browsing tag

love

‘காதல் கல்யாணம்’ பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

ஜெகமே தந்திரம், கட்டா குஸ்தி, கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ”கட்டா குஸ்தி-2′ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு. மலையாளத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘காதல் என்றாலே சிக்கல்தான். நாம் வேண்டும் என்று நினைக்கும்போது, தானாக வரும் விஷயம்தான் காதல்’ என பதிலளித்தார். அதன்பின்னர் ‘நீங்கள் […]

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி; ‘அலைபாயுதே-2’ ரேஞ்ச்?

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படம் குறித்த […]

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதாவது தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலை​யாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார். இவர் இப்​போது சைக்காலஜிக்​கல் […]

மூன்று கோணங்களில் ஒரு காதல் கதை: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..

காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்.. மூன்று வித​மான காதலைச் சொல்​லும் வித​மாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்​ளது. இதை அறி​முக இயக்குநர் ராஜசேகர்​.ஜி இயக்​கி​யுள்​ளார். த்ரி​குண் நாயக​னாக நடிக்​கும் இப்​படத்​தில் ஜீத்தா கோஷ், இனி​யா, ராதா, ரவிமரி​யா, தம்பி ராமை​யா, சத்​யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அருண் விஷுவல்ஸ் […]

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.!!

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார் மிருணாள் தாகூர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து […]

மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணமா?: பிரபல இயக்குநர் விளக்கம்..

காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான மும்பை இயக்குநர் விளக்கம் அளித்திருப்பதாக பாலிவுட் ஊடகம் வாயிலாக தெரிவித்திருப்பதாவது: நானும், தனுஷும் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம். ஆனால், இப்படியொரு திருமணம் நடப்பதாக அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறாரா?. இந்த கல்யாணம் பற்றி எனக்கு தெரியாது என்றால் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. விவாகரத்து […]

ரன்வீர்சிங் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம்..

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லோகா’ படத்தின் மாபெரும் […]

திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?: பிரபாஸ் விளக்கம்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் இந்திய அளவில் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர், இது வதந்தி என தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக […]

காதலால் ஏற்படும் வலியை சொல்லும் படம் ‘புகார்’: படக்குழு அப்டேட்ஸ்..

ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். ‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக் குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும், […]

நீயெல்லாம் கடவுளா?: இயக்குநர் செல்வராகவன் பதிவு..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சில […]