மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணமா?: பிரபல இயக்குநர் விளக்கம்..

காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி மிருணாள் தாகூரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது.

இந்நிலையில் தனுஷுக்கு மிகவும் நெருக்கமான மும்பை இயக்குநர் விளக்கம் அளித்திருப்பதாக பாலிவுட் ஊடகம் வாயிலாக தெரிவித்திருப்பதாவது:
நானும், தனுஷும் தினமும் செல்போனில் பேசிக் கொள்வோம். ஆனால், இப்படியொரு திருமணம் நடப்பதாக அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்கிறாரா?. இந்த கல்யாணம் பற்றி எனக்கு தெரியாது என்றால் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

விவாகரத்து நடந்தபோது மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்தே இருப்போம் என்று தனுஷும், அவரின் முன்னாள் மனைவியும் முடிவு செய்தார்கள். தனுஷுக்கு மறுமணம் செய்யும் ஐடியா இல்லை. தன் மகன்களுக்கு சித்தியை கொண்டு வர அவர் விரும்பவில்லை. தனுஷ், மிருணாள் ஆகியோருக்கு ஒருவரையொருவர் பிடிக்கும். ஆனால் அதற்காக அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அர்த்தம் இல்லை’ என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முன்னதாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தபோதே இனிமேல் என் வாழ்க்கையில் கல்யாணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என அப்பா கஸ்தூரிராஜாவிடம் தனுஷ் தெரிவித்ததாக பேசப்பட்டது.

தற்போது, மிருணாள் தாகூரோ வீடியோ ஒன்றை வெளியிட்டு பின்னணியில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் வந்த ‘யாக்கை திரி’ பாடலை ஒலிக்கவிட்டிருக்கிறார். இவர் மராத்தி பெண், ஒலிக்கவிட்டிருக்கும் பாடல் தமிழ். இச்சூழலில், இணையவாசிகள் ‘இவர்களுக்குள் கலயாணம் இல்லை, ஆனால் காதல் உண்டு’ என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

dhanush weds mrnal thakur marriage rumour explaine

 

actor dhanushactress mrnal thakurlove