தளபதி விஜய்யை வைத்து ‘கோட்’ திரைப்படம் இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
‘விஜய் மிகச் சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல், ஒரு கமர்ஷியல் வட்டத்துக்குள் வைத்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.
‘கோட்’ படத்தில், தனது மகன் ஜீவனை காணவில்லை என விஜய் அழும் சீனில், ஓவர் எமோஷனலாக நடித்துவிட்டார். நான் இன்னொரு டேக் கேட்டேன். அவர், உடனே எதற்காக இன்னொரு டேக் என கேட்டார்.
நான் அதற்கு, ‘உங்கள் மகன் மீண்டும் கிடைத்து விடுவான் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அந்த எண்ணத்தோடு நடியுங்கள் என சொன்னேன். உடனே அவரும் மறுபேச்சு சொல்லாமல் நான் கேட்ட மாதிரி நடித்துக் கொடுத்தார். அந்த சீனுக்கு ‘நாயகன்’ படம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜய் அந்த சீனில் நடித்ததை பார்த்து, ஸ்பாட்டில் இருந்த அனைவருமே கைகளை தட்டி விஜய்யை பாராட்டினார்கள்.
அதேபோல், சினேகாவிடமும் தனது மகன் இறந்ததை சொல்லாமலே புரிய வைக்க வேண்டும். அந்த சீனிலும் விஜய் அருமையாக நடித்திருப்பார்’ என்றார்.
எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு படம் இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக இணைய வேண்டியதாக இருந்தது. ஆனால், அது ‘தி கோட்’ படமாக மாறிவிட்டது. இப்போது சத்யஜோதி நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டும். அதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கதையின் ஐடியாவை இறுதி செய்துவிட்டோம். திரைக்கதை, காட்சியமைப்புகள் உள்ளிட்டவைக்கான பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு இந்த கதையின் ஐடியா தெரியும்.
அதே மாதிரி, இன்னொரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையாக எழுதி முடித்துவிட்டு, பின் நாயகன் யார் என்பதை முடிவு செய்யலாம் என இருக்கிறேன்’ என்றார் ரகசியப் புன்னகையுடன்.
இந்நிலையில், முன்னதாக அஜித்தை சந்தித்து வெங்கட் பிரபு கதை சொன்னதாகவும், அதற்கு அஜித் ஓகே சொல்லிவிட்டார் என்றும், அக்கதை மங்காத்தா பார்ட்-2 படமாக அமையலாம் அல்லது வேறொரு தலைப்பு சூட்டப்படலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.