சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடல் வெளியீடு!

‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில மணிநேரங்களிலேயே இந்தப் பாடல் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது.

உற்சாகமும், கம்பீரமும், அதிக ஆற்றலும் நிறைந்த இந்த பாடலில் நடிகர் சூர்யா புதிய மாஸ் அவதாரத்தில் ரசிகர்களை கவர்கிறார். தீப்பொறி பறக்கும் காட்சிகளும், அதிரடி இசையும் இணைந்து, ரசிகர்களை கொண்டாட வைக்கும் பாடலாக ‘தி ஒன் ரூல்’ உருவாகியுள்ளது.

இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். துள்ளலான இசைக்கு கூடுதலாக, பாடலாசிரியரும் பாடகருமான கானா காதர் வரிகளை எழுதி தனது தனித்துவமான குரலில் பாடியிருப்பது பாடலுக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

ஏற்கனவே வெளியான ‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய பாடல்களைப் போலவே, ‘தி ஒன் ரூல்’ பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தின வார இறுதியை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

GV PrakashKalaiarasi Radikaa SarathkumarMamitha BaijuNassarRaveena TandonsudhasuriyaThe One Rule Lyric VideoThe One Rule Song from Suriya's Viswanath & Sons ReleasedVenky AtluriViswanath & Sons