ரெட்ரோ படத்தின் OTT உரிமத்தை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் OTT குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த படத்தின் உரிமையை netflix நிறுவனம் என்பது கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்த ஆதாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.