5 ஆண்டுகள் காத்திருந்ததற்கு காரணம் இதுதான்.. நடிகை சாய் பல்லவி

திரைப்படங்களில் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய விரும்பவில்லை என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஒரு கதாபாத்திரத்தின் தனித்துவம் மற்றும் அது கதைக்கு அளிக்கும் பங்களிப்பே தனக்கு முக்கியம் எனக் கூறியுள்ள அவர், அர்த்தமுள்ள கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதற்காக தனது திரைப்பயணத்தில் சுமார் 4 முதல் 5 ஆண்டுகள் வரை பொறுமையாகக் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, கவர்ச்சியை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களை விட, கதையின் முக்கியத்துவத்தையும் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளுக்கே முன்னுரிமை அளிப்பதாக தனது தேர்வு குறித்து பகிர்ந்துள்ளார்.

Sai PallaviThis Is Why Sai Pallavi Waited 5 Years