கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘டாடி கூல் (King Version)’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் கான் இணைந்து நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருவரும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைந்துள்ளனர்.
‘து மில் ஜாயே’ பாடல் மூலம் காதல் நாயகனாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் மாஸ் அவதாரத்திலும் ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கானின் ‘கிங்’ படத்திலிருந்து தற்போது வெளியாகியுள்ள ‘டாடி கூல் (King Version)’ பாடல், ரசிகர்களுக்கு புதிய விருந்தாக அமைந்துள்ளது.
உற்சாகமான இசை, கவர்ச்சியான ரிதம், ரெட்ரோ நடன அசைவுகள் என உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலுக்கு பாலிவுட் பாணியில் புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் தனது வழக்கமான ஸ்டைல் மற்றும் வசீகரத்துடன் நடனமாட, கரீனா கபூர் கானின் திரைத் தோற்றமும் இருவரின் கெமிஸ்ட்ரியும் பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளன.
போனி எம். இசைக்குழுவின் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலை அடிப்படையாகக் கொண்டு, ஃபிராங்க் ஃபேரியன் மற்றும் ஜார்ஜ் ரெயாம் எழுதிய பாடல் வரிகளுக்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர் சச்சின் – ஜிகர். அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு, தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் வைபவி மெர்ச்சன்ட் நடன அமைப்பு செய்துள்ளார். பாடல் வரிகளை குமார் எழுதியுள்ளார்.
- Advertisement -
மெட்டாவின் முக்கிய நிகழ்வான ‘House of Instagram 2026’ நிகழ்ச்சியில் இந்தப் பாடல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தியாவின் 700-க்கும் மேற்பட்ட முன்னணி படைப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பாடல் வெளியீடு இடம்பெற்றது.
கிறிஸ்துமஸ் வெளியீட்டை முன்னிட்டு ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி வரும் நிலையில், 2026-ம் ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்புப் படங்களில் ஒன்றாக இப்படம் உருவெடுத்துள்ளது.
‘டாடி கூல் (King Version)’ பாடலை Zee Music Company மற்றும் T-Series நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் காணலாம்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.