Browsing tag

shah rukh khan

பிரமாண்ட தொடக்கம்! Kannan Ravi Group-ன் Panther Club திறப்பு விழாவில் ஷாருக் கான் கலந்துகொண்டார் !

துபாயில் Kannan Ravi Group நிறுவனத்திற்கு சொந்தமான புதிய பிரம்மாண்ட பொழுதுபோக்கு மையமான Panther Club-ஐ, கிங் கான் ஷாருக் கான் நேற்று திறந்து வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வு, துபாயின் நைட்லைஃப் வரலாற்றில் முக்கியமான தருணமாக மாறி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் உச்சமாக அமைந்தது. துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group), வணிகம், ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் (Hospitality), பொழுதுபோக்கு மற்றும் லக்ஷரி சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் […]

“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!! 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், […]

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’: அட்லி குறிப்பிடுவது யாரை தெரியுமா?

என் இதயம், ஆன்மா எல்லாமே ‘அவர்தான்’ என இயக்குனர் அட்லி நெகிழ்ந்துள்ளார். அவர் யாரென பார்ப்போம்.. கோலிவுட்டில் வென்று, பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானதை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார். ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் […]

ஷாருக்கான் பட வசூலை ஓவர் டேக் செய்த லோ பட்ஜெட் படம்: அமீர்கான் சாதனை..

பாலிவுட் திரையுலகில் கலெக்‌ஷன் கிங் என பேர் எடுத்தவர் ஷாருக்கான். இவரை, குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படமொன்று ஓவர் டேக் செய்திருக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ‘ஜீரோ’ படம் தோல்வி அடைந்ததை அடுத்து, சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இதனால், அவர் நடிப்பில் 2023-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆக வில்லை. பின்னர், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பதான்’ படம் மூலம் […]