அன்புதான் இறுதியில் வெற்றி பெறும்… அமைதி ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் தொடங்க வேண்டும்! என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
குளோபல் பீஸ் ஹானர்ஸ் (Global Peace Honours) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், வன்முறைக்குப் பதிலாக உரையாடலையும், பயத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
- Advertisement -
மேலும், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ முடிவு செய்தால், இறுதியில் அன்புதான் வெற்றி பெறும். அமைதி என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல; அது ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் தொடங்க வேண்டும். அமைதி என்பது ஒரு முடிவு மட்டுமல்ல, அது நமது பொறுப்பும், ஒவ்வொரு நாளும் நாம் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதியுமாகும்.
அனைவரின் கருத்துகளுடனும் நாம் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதையையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். யாருக்கும் துன்பத்தையும் தொந்தரவையும் ஏற்படுத்தாமல் வாழ வேண்டும் என்றும் ஷாருக்கான் தனது உரையில் குறிப்பிட்டார்.