சூர்யாவுக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமில்லை.. ஆனால்? உண்மையை உடைத்த சிவகுமார்..!

சூர்யாவுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று சிவக்குமார் பேசியுள்ளார்.

Suriya does not want to act in cinema.. But Sivakumar broke the truth.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சூர்யா குறித்த சுவாரஸ்ய தகவல்களை சிவகுமார் பகிர்ந்துள்ளார். அதாவது சூர்யாவிற்கு சினிமாவில் நடிக்க இஷ்டமில்லை அவர் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் என்னுடைய நண்பர் ஜோசியர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை பார்த்து சூர்யா ஒரு பெரிய நடிகராக வருவார் என்று சொல்லி இருந்தால் ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு தான் இயக்குனர் வசந்த் சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்திருந்தார் அதன் பிறகு சூர்யாவிற்கு பல வாய்ப்புகள் வந்தது என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Suriya does not want to act in cinema.. But Sivakumar broke the truth.
SivakumarsuriyaSuriya does not want to act in cinema.. But? Sivakumar broke the truth..!Suriya45Tamil cinemaகார்த்திசிவக்குமார்சூர்யாசூர்யா 45ரெட்ரோ