`ஜுமாக்கா’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி

பழமையான கேமராவை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள காமெடி ஃபேண்டஸி திரைப்படமான ‘ஜுமாக்கா’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜே.பி. சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் அசோக் ராம் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், முனீஸ்காந்த், பாலாஜி சக்திவேல், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, கல்கி ராஜா, ஜென்சன் திவாகர், தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் சில காட்சிகளை முன்னதாக பார்த்த விஜய் ஆண்டனி, இயக்குநர் அசோக் ராமின் கதை சொல்லும் விதத்தையும், தயாரிப்பாளர் ஜெயக்குமாரின் முயற்சியையும் மனதார பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நகைச்சுவை, ஃபேண்டஸி மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள ‘ஜுமாக்கா’, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Balaji SakthivelJumaakkaVijay AntonyVijay Antony unveils the first-look poster of Jumaakka