Browsing tag
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்குகிறார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். சமீபத்தில் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முக்கிய காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. […]
நடிகர் கார்த்தி மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி முதன்முறையாக ஜோடி சேரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் எளிய பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தெலுங்கில் ‘மேட்’ (MAD) மற்றும் ‘மேட் ஸ்கொயர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கல்யாண் சங்கர், இந்தப் படத்தின் மூலம் கார்த்தியுடன் இணைகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக (Comedy Entertainer) இது உருவாகவுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் […]
ஜப்பான் படத்தின் தோல்விக்கு காரணம் நான் தான் என கூறியுள்ளார் இயக்குனர் ராஜு முருகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ராஜு முருகன் தற்போது மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த […]
வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]
கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கவுரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், அனந்து […]
சென்சார் குறித்த கேள்விக்கு இயக்குனர் நலன் குமாரசாமி பதில் அளித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது வா வாத்தியார் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வா வாத்தியார் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்ட இவர் பிறகு சென்சார் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதாவது சென்சார் […]
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் […]
சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது […]
கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது. இப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் […]