ரசிகர்களுக்காக விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்வார்: இயக்குனர் மிஷ்கின் நம்பிக்கை

விஜய் நடிப்பில் கொண்டாடப்பட்ட கிளாஸிக்கலான லவ் மூவி ‘சச்சின்’ இன்று ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்சாக நிகழ்வுகள் பற்றிக் காண்போம்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ஒளிப்பதிவில், தளபதி விஜய் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

இப்படம், இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே 20 ஆண்டுகள் கழித்தும் இப்படம் இன்று ரீரிலீஸாகியுள்ளது. தயாரிப்பாளர் தாணு மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை மறு வெளியீடு செய்திருக்கின்றார்.

கடந்த சில நாட்களாகவே இப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரொமோட் செய்து வந்தார் தாணு. குறிப்பாக பிரிமியர் ஷோ கூட ஏற்பாடு செய்திருந்தார் தாணு. ஒரு ரீரிலீஸ் படத்திற்கு பிரிமியர் ஷோ போட்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு, ப்ரோமோஷன் செய்யப்பட்ட ‘சச்சின்’ திரைப்படம் இன்று மறு வெளியீட்டிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது:

‘சச்சின் திரைப்படத்தை இப்போது தான் பார்க்கிறேன். மிகவும் அருமையான ஒரு படம், அழகான ஒரு படம், ஜாலியாக இருந்தது. விஜய் இப்படத்தில் ரொம்ப அழகாக இருந்தார். விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும். அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தான் நம்புகிறேன்’ என தனது விருப்பத்தை அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், மிஷ்கின் சொன்னதை போல, விஜய் தன் முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து படங்கள் நடித்தால், சிறப்பாக இருக்குமே என விஜய்யின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு விஜய்யின் ‘கில்லி’ படம் ரீரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு ‘சச்சின்’ படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

actor vijaydirector mysskinsachein movieகலைப்புலி எஸ். தாணுதளபதி விஜய்