விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படமான “ஸ்லம் டாக்” (துணைத் தலைப்பு: 33 Temple Road) ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களும், அதிரடியான திரைக்கதைகளும் மூலம் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், படப்பிடிப்பு பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே வெளியான டைட்டில் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் அடுத்த கட்ட புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக டீசர் வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டீசர் வெளியீட்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் அதிரடியான உலகத்தை வெளிப்படுத்துகிறது. இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு, கன்னட நடிகர் துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

“அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” உள்ளிட்ட படங்களில் தனது பின்னணி இசையால் பாராட்டுகளை பெற்ற தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri Connects, JB Motion Pictures
இசை : ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

SlumdogTeaser Release Date Announced for Vijay Sethupathi's ‘Slum Dog’Vijay Sethupathiவிஜய் சேதுபதிஸ்லம் டாக்