காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே இணையும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ல் உலகமெங்கும் வெளியீடு!

Zee Studios வழங்க, MIG Production & Studios தயாரிப்பில் உருவாகியுள்ள சமூக அக்கறை மிக்க திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story). காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை சேட்டன் டி.கே. இயக்கியுள்ளதுடன், சாகர் பி. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ளார். சமூகத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தி இந்தியா ஸ்டோரி’ அல்லது ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன்’ என அறியப்படும் இந்த படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இரசாயனங்களின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகளை ஆழமாக பதிவு செய்கிறது. ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகரும் கதை, பொதுமக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பெரிய சமூகக் கேள்விகளை முன்வைக்கிறது.

இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் மற்றும் பொறுப்பான நடைமுறைகள் அவசியம் என்பதை திரைப்படம் வலியுறுத்துகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் சாகர் பி. ஷிண்டே கூறுகையில்,

“நாட்டின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கும் ஒரு உண்மையை இந்த திரைப்படம் வெளிக்கொண்டு வருகிறது. பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது மனித வாழ்வையே அச்சுறுத்தும் ஒரு பெரிய சவாலாகும். இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வையும் பொறுப்புணர்வையும் உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.

இயக்குநர் சேட்டன் டி.கே. கூறியதாவது,

“இந்தக் கதையின் உண்மைத்தன்மையை திரையில் கொண்டுவர முழு குழுவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேயும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அவர்களின் ஈடுபாடும் நுணுக்கமான நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது” என்றார்.

பல்வேறு வெற்றிப்படங்களில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் பாராட்டுகளை குவித்துள்ள ஷ்ரேயாஸ் தல்படே, இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் புதிய திரை இணைவு கதைக்கு கூடுதல் உணர்ச்சி ஆழத்தையும் வலிமையையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துள்ள மற்றும் சமூகப் பொறுப்புணர்வை தூண்டும் திரைப்படங்களை விரும்பும் இன்றைய பார்வையாளர்களுக்கு, ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு முக்கியமான திரையரங்க அனுபவமாக அமையும். சினிமாவைத் தாண்டி சமூக விவாதங்களை உருவாக்கும் சக்தி கொண்ட படைப்பாக இது உருவாகியுள்ளது.

படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவை நிஷாந்த் பக்வத், இசையை மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல்களை ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே மேற்கொண்டுள்ளனர்.

Zee Studios நிறுவனத்தின் உலகளாவிய வெளியீடாக, ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Atul TiwariKajal Aggarwal KitchluKamlesh SawantManish WadhwaMurli SharmaSham MashilkarShreyas TalpadeTeaser of Kajal Aggarwal's The India Story ReleasedThe India StoryTrisha Sarda