ஆறு வருடங்கள் கழித்து ரவிமோகன் நிறைவேற்றிவிட்டார்: யோகிபாபு பெருமிதம்..

ரவிமோகன் குறித்து யோகிபாபு பகிர்ந்துள்ள தகவல் பார்ப்போம்..

பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவிமோகன் – யோகிபாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்துள்ளது.

இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகிபாபு கதையின் நாயகன். அதாவது, ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறார்.

இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகிபாபு, ‘கோமாளி’ படப்பிடிப்பின்போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆறு வருடங்கள் கழித்து அதை ரவிமோகன் நிறைவேற்றி விட்டார்’ என்று கூறியிருக்கிறார்.

ரவிமோகன் ஸ்டுடியோஸ் என்கிற பெயரில் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள ரவி மோகன், முதல் கட்டமாகத் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றுதான் யோகி பாபு நாயகனாக நடிக்க, அவர் இயக்குநராக அறிமுகமாகும் ‘தி ஆர்டினரி மேன்’. தற்போது படத்தின் புரமோஷன் காணொளி ஒன்றையும் வெளியிட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

ravi mohan debut an ordinary man film explained
actor ravimohanactor yogi babustoryபிரதீப் ரங்கநாதன்ரவிமோகன்