கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அவர் தெரிவிக்கையில், ‘நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ‘கன்னித்தன்மை’ என்பது ஒரு இரவு விஷயம்.

எனவே, தங்களுக்கு கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அதற்குப் பதிலாக நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை’ என கூறியுள்ளார். இதனால், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தன்னைக் காட்டிலும் வயதில் மிகவும் இளையவரான நிக் ஜோனாஸை மணந்த பிரியங்காவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், நீங்கள் ஏன் பணத்தைப் பார்த்து திருமணம் செய்தீர்கள்? இன்று பணம் இருந்தால் யாரையும் திருமணம் செய்து கொள்கிறார்கள் பெண்கள். உங்களைப் போன்றவர்களுக்குப் பணம்தான் எல்லாம். பணம் ஏன், ஆணின் குணத்தைப் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமே?

நீங்கள் எல்லாம் திருமணத்திற்கு முன்பே கன்னித்தன்மையை இழந்துவிட்டதால், மற்றவர்களுக்கும் இதுபோன்ற மோசமான அறிவுரைகளை வழங்குகிறீர்களா?. முதலில் பண ஆசையை விட்டுவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறி வருகின்றனர்.

நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை என்று கூறிய நடிகையின் வார்த்தைகளையே முன்வைத்து, வேறு சிலர், திருமணத்திற்கு முன்பே வேறொருவருடன் உடலுறவு கொள்பவர் உங்கள் பார்வையில் நல்ல நடத்தை உடையவரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

பிரியங்கா, திருமணத்திற்கு முன்பே பலருடன் அவர் பெயர் இணைத்துப் பேசப்பட்டது. இப்போது ஒரு குழந்தைக்குத் தாயுமாகிவிட்டார்.

பிரியங்கா நடித்த படங்களில் ஒன்று “தி பிளஃப்”. 19 ஆம் நூற்றாண்டில் கரீபியன் கடலில் நடக்கும் இந்தப் படத்தில், பெண் கடற்கொள்ளையராக வருகிறார். இப்படம் அக்டோபர் 10, 2025 அன்று வெளியாகிறது. அவரது மற்றொரு படம் ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’. இதில் ஹாலிவுட் நடிகர்களான ஜான் சீனா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோருடன் நடித்துள்ளார். இப்பபடம் ஜூலை 2-ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

priyanka chopra virginity comments spark controversy
actress priyanka chopralifemarriageதிருமணம்பெண்கள்