Browsing tag

marriage

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது?

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பில் தான். பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை இயக்குநர் வினோத் வாயிலாக பல மாற்றங்களுடன் உருவாக்க காரணமே ஓட்டுதான் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுவார்கள் என எண்ணமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. படம் தேர்தலுக்கு பின்பு ரிலீஸானால் யார் இம்பிரஸ்ஸானாலும், அதனால் தவெகவுக்கு பயனில்லை. இப்படியெல்லாம் ரிலீஸில் விவகாரம் வரும் என விஜய் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகன் படத்தை […]

‘காதல் கல்யாணம்’ பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

ஜெகமே தந்திரம், கட்டா குஸ்தி, கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ”கட்டா குஸ்தி-2′ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு. மலையாளத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘காதல் என்றாலே சிக்கல்தான். நாம் வேண்டும் என்று நினைக்கும்போது, தானாக வரும் விஷயம்தான் காதல்’ என பதிலளித்தார். அதன்பின்னர் ‘நீங்கள் […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டம்: கல்யாணி பிரியதர்ஷன் பதிவு..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை கல்யாணி […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் செலவு ரூ.25 கோடி?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. திருமணம் செய்யவுள்ளனர். மார்ச் மாதம் 4-ந்தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் […]

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.. பாரபட்சம் பார்ப்பதாக இயக்குனர் சேரன் வேதனை.!!

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை என சேரன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில […]

திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்..!

திருமணம் ஆக வேண்டி திருவொற்றியூரில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 9 சீசன் சமீபத்தில் நடந்தது. டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் இடம் பெற்று இருந்தார். 20 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். இவர் தற்போது திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் […]

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். […]

விஜய் தேவர் கொண்டா மற்றும் ரஷ்மிகாவிற்கு விரைவில் திருமணமா? வெளியான திருமண தேதி.!!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தனர். தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலும் இவர்கள் இருவரும் மௌனம் காத்து வந்திருந்தனர் இந்த நிலையில் நேற்று […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போதும் நயன் தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துகொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் […]

திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்?: பிரபாஸ் விளக்கம்..

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் இந்திய அளவில் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. பின்னர், இது வதந்தி என தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக […]