விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டம்: கல்யாணி பிரியதர்ஷன் பதிவு..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர்.

அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கலந்து கொண்டிருக்கிறார்.

ஹல்தியில் தனது முகத்தில் பூசப்பட்ட பச்சை நிற பொடியுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்் இதன் மூலமாக அவர் விஜய், ரஷ்மிகா திருமணத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijay devarakonda and rashmika marriage today

 

marriageRashmikavijay devarakondaகல்யாணி பிரியதர்ஷன்ராஷ்மிகா மந்தனா