விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது?

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பில் தான். பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை இயக்குநர் வினோத் வாயிலாக பல மாற்றங்களுடன் உருவாக்க காரணமே ஓட்டுதான் என கூறப்படுகிறது.

‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுவார்கள் என எண்ணமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. படம் தேர்தலுக்கு பின்பு ரிலீஸானால் யார் இம்பிரஸ்ஸானாலும், அதனால் தவெகவுக்கு பயனில்லை. இப்படியெல்லாம் ரிலீஸில் விவகாரம் வரும் என விஜய் எதிர்பார்க்கவில்லை.

ஜனநாயகன் படத்தை போன்றே கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. யாஷ் நடித்த ‘டாக்சிக்’ பட வெளியீடும் தள்ளிப் போய்விட்டது. மார்ச் 19-ந்தேதி ரிலீஸாக வேண்டிய ‘டாக்சிக்’ படம் மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழலால் ஜூன் 4-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸை கடைசி நேரத்தில் தள்ளிப் போட்டீர்கள். யாஷ் படத்தையுமா? என கே.வி.என். நிறுவனத்தை ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

அரசியலுக்கு வருவதால் இனிமேல் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ள விஜய்யின் கடைசிப் படம்மான ஜனநாயகன், தேர்தல் முடிந்த பிறகு, நிச்சயம் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்துவிடுவார் என இணையவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் என்பதால், விஜய் நிச்சயம் மீண்டும் படங்களில் நடிக்க மாட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். இதற்கிடையே சங்கீதா தொடர்ந்திருக்கும் விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

jananayagan movie has finally got a new release date
jananayagan moviemarriagevijayசங்கீதாவிஜய்