இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கே உரிய தனித்த பாணியில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவு வழக்கம்போல வைரலாகி வருகின்றது. தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
‘தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் நடித்திருந்தால், மேலும் ஒரு தேசிய விருதை நான் வாங்கியிருப்பேன். ஆனால், அது மிஸ்ஸானது. அதுபோல, தனுஷுடன் நான் இணைந்து நடித்த ‘சூதாடி’ படமும் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது ‘இட்லி கடை’ படத்தில் அவரே என்னை நடிக்குமாறு அழைத்தார். எந்த வித மறுப்பும் சொல்லாமல் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்தேன். நேற்று டப்பிங் முடிவடைந்தது. சுறுசுறுப்பாக சகலகலா வல்லவராக மிளிரும் தனுஷ், அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கிறார்’ என பதிவிட்டிருந்தார் பார்த்திபன்.
இதையெல்லாம் தாண்டி அவர், இந்த பதிவில் ‘மிளிரினால்’ என்ற வார்த்தையோடு அருகில் ( மிருணாள் என தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, ஏனெனில், அது கிசுகிசுவாக போய்விட்டதே?) என வழக்கமான தன் ஸ்டைலில் பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது செம வைரலாகி வருகின்றது.
மேலும், இட்லி கடை திரைப்படத்தில் அருண் விஜய் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இப்படங்களின் போஸ்டர் மற்றும் பாடல்களை கவனிக்கும்போது, இது ஒரு கிராமத்து பின்னணியில் உருவான பீல் குட் படமாக தெரிகின்றது.