வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ படத்திம் பட பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. டிஜிட்டல் உலகில் பிரபலமானவரும், டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவருமான வி.ஜே. சித்து, இப்படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரதீப் ஈ. ராகவ் கவனித்துள்ளதுடன், ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் கனவுகள், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் சுய அடையாளத்தைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்ட முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக ‘டயங்கரம்’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், இசை வெளியீடு மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Adithya KathirDayangaramHarshath KhanIlavarasuKaali VenkatNatty NatrajNithin SathyaVj SiddhuVJ Sidhu's Dayangaram Wraps Up Shootingடயங்கரம்