கார்த்தியின் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்க, விவிஒய் என்டர்டெயின்மென்ட் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள இப்படம், சர்தார் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ளது.

வெளியாகியுள்ள டீசரில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஸ்பை த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார். ராஜீவன் நம்பியார் கலை இயக்கத்தையும், வேலுக்குட்டி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ள நிலையில், ஏ. வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

வெளியான சில நிமிடங்களிலேயே ‘சர்தார் 2’ டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Ashika RanganathkarthiKarthi's Sardar 2 Teaser ReleasedMalavika MohananRajisha Vijayansardar 2Sardar 2 TeaserSJ SuryahYogi Babuசர்தார் 2