தமிழ் – மலையாளத்தில் உருவான ‘ஆலி’… ஆகஸ்ட் 14-ல் திரைக்கு வருகிறது!

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடன், இளம் படைப்பாளிகளின் புதிய சிந்தனை மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில், தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆலி’.

காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக பேசும் இப்படம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. மதம், ஜாதி எல்லைகளைத் தாண்டி நடைபெறும் திருமணத்தை மையமாகக் கொண்ட கதை, படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். பெண்கள் இயக்குநர்களின் வரிசையில் தனித்துவமாக திகழும் அவர், படத்தின் பாடல்களையும் எழுதியுள்ளார். மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

படத்திற்கு ரினாஸ் நாசர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், அபு ஜியாத் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ராமவர்மா தம்புரான், சுரேஷ், ரத்தீஷ் ராய், ஆர்.ஆர். பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

மேலும், ஹுசைன், சம்பத், அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். அரபி மற்றும் இந்திப் பாடல்களுக்கு ரத்தீஷ் ராய் இசையமைத்துள்ளார்.

காதல், மனிதநேயம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட ‘ஆலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

AaliBilingual Film 'Aali' Set for August 14 Release