கவுதம் கார்த்திக்கின் காதல் மனைவி மஞ்சிமாவுக்கு விருது

விருது என்பது கலைஞர்களுக்கு தரும் கவுரவம், ஊக்குப்படுத்துதல். அவ்வகையில் மஞ்சிமா பெற்ற விருது காண்போம்..

மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர், போன்ற படங்களில் நடித்தார்.

‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் போது, அவரை காதலிக்க தொடங்கிய மஞ்சுமா மோகன், கடந்த 2022-ஆம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். நடிகை என்பதை தாண்டி, டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் மஞ்சுமா மோகன், சமீபத்தில் ஓடிடியில் வெளியான, ‘சுழல் 2’ வெப் தொடரில், நாகம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரைம் திரில்லர் ஜார்னரில் வெளியான இந்த வெப் தொடரை பிரம்மா இயக்கியிருந்த நிலையில், புஷ்கர் காயத்ரி தயாரித்திருந்தனர்.

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸ் முழுவதும் வரவில்லை என்றாலும் இவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது.

இந்த வெப் தொடரில் நடித்ததற்காக, இவருக்கு “ஸ்பெஷல் ரோலில் நடித்த சிறந்த நடிகைக்கான” ஓடிடி விருது வழங்கப்பட்டுள்ளது. அண்ணா யுனிவர்சிட்டியில் நடந்த ‘டெக்னோபஸ் 25-வது ஆண்டு விழாவில்’ இந்த விருதை ‘நாகம்மா’ கதாபாத்திரத்திற்காக பெற்றுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

actor gautham karthikActress Manjima Mohanmarriageகாதல்விருது