இளையராஜா- ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்

இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா திரையுலகில் தனது 50வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இருவரும் இணையும் 25வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக இயக்குநர் காசிமாயன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுத, வசனத்தை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

- Advertisement -

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் செந்தில் மற்றும் கோவை சரளா, ராமராஜனுடன் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களின் காமெடி கூட்டணி படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜா – ராமராஜன் கூட்டணியை மீண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இப்படத்தின் பணிகள் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

IlaiyaraajaIlaiyaraaja & Ramarajan Reunite for Their 25th Film Kadavul Thandha ParisuKadavul Thandha ParisuRamarajan