விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 10 நிகழ்ச்சி இன்று ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய முயற்சிகளுடன் இந்த சீசன் தொடங்கப்பட்டுள்ளது.
சீசன் 10 தொடக்க நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு 29 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் நேரலை மேடையில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கினர். இதில் போட்டியாளர்களின் அறிமுகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நேரலையில் பங்கேற்ற பார்வையாளர்கள் அவர்களின் பிக் பாஸ் பயணத்தைத் தீர்மானிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 19 போட்டியாளர்களாக அன்சார், முகேஷ், தான்யா, ராகவ், குமரன், சந்தினி, சவின்யா, வினோத், பாண்டியன், அவினாஷ், முத்தழகி, அஸ்வினி, பிரித்விநாத், ஜாவேத், லட்சுமி பிரியா மற்றும் ஷாதிகா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளனர்.
- Advertisement -
இவர்களுடன் ‘பிக் பாஸ்: தி காமன் மேன்’ என்ற மாநில அளவிலான போட்டியின் மூலம் தேர்வான ஜேசன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று சாமானிய மக்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பிரதான வீட்டில் பிரபலங்களுடன் சாமானிய மக்கள் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், தொடக்க நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்டவர்களில் சாமானிய மக்களான ஆஷா, மணிகண்டன், சோபா, மணிவண்ணன், டார்வின் ஆகியோருடன் ஷப்னம், பிரசாந்த் ரிவியூவர், கவிதா, அக்ஷிதா, ராகவ், மாளவிகா, புவியரசன், எபி மற்றும் ரகு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய்யிலும் ஜியோஹாட்ஸ்டாரிலும் காணலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் வீட்டின் நேரலையைப் பார்க்கும் வசதியும் உள்ளது.
Bigg Boss கொண்டாட்டம் ஆரம்பம்..🔥😎 | Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10… pic.twitter.com/zvBwKPnJiv
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026