Browsing tag

Ilaiyaraaja

ராஜா சாரின் இசைதான் படத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் – கார்த்திக் சுப்புராஜ்

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நடிகர் முத்துப்பாண்டி பேசுகையில், இது தனது முதல் மேடை என்றும், வாய்ப்பு […]

ஆஸ்கரை நோக்கி இசைஞானி இளையராஜா!

கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் தயாரிப்பில், கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அந்தோனி’. சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவான இப்படம், சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala உள்ளிட்ட […]

டி.ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்கும் திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். பன்முகக் கலைஞர் டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில், அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. டி. ராஜேந்தர் மற்றும் […]

இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் என்பதால், அறிவிப்பு வெளியான முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தனது படைப்புகளில் மண் சார்ந்த வாழ்வியலையும், உணர்வுப்பூர்வமான கதைகளையும் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ படத்திலும் தனது தனித்துவமான கதை சொல்லலை தொடர்கிறார். இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், […]

இளையராஜா- ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்

இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா திரையுலகில் தனது 50வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இருவரும் இணையும் 25வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் காசிமாயன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுத, வசனத்தை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் […]

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் தட்டுவண்டி!

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’… இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்! சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசுகளின் […]

இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடல் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் […]

இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இது அவரின் 1540வது படம் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பின்னணி இசை தனி […]