Browsing tag

Ilaiyaraaja

தேசிய பாதுகாப்புக்கு நிதி: இளையராஜா அறிவிப்பு..

தேசிய பாதுகாப்புக்காக, இளையராஜா நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. காஷ்மீரில் உள்ள பகல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி, 26 சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதனால் எல்லையில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இசை அமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான […]

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி: ரஜினி, இளையராஜா பாராட்டு..

மே மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இந்திய ராணுவம், தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நாடே பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். […]

அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]

இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்.. இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார். 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், […]

சிம்பொனி படைத்த இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆர்கானிக் தொகுப்பு

சிம்பொனி இசைத் தொகுப்பை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தனது ஆர்கானிக் தொகுப்பை வழங்கினார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். இதனைத் தொடர்ந்து அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். மேலும், அரசியல் களத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளராகவும் தொடர்ந்து பயணித்து வருகின்றார். குமரி மாவட்டம், நாஞ்சில் […]

இளையராஜாவுக்கு அரசின் சார்பில் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிம்பொனி சாதனை படைத்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில் விழா சிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை கடந்த 8+ம் தேதி லண்டனில் அரங்கேற்றினார். இவரது சிம்பொனியை காண, பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் குழுமினார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் படையே புறப்பட்டுச் சென்றது. இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜாவை தமிழ்நாடு […]

சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்

சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில், ‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் […]

13 தேசங்களில் சிம்பொனி நடைபெற இருக்கிறது: சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்.. இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]