சிம்பொனி படைத்த இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆர்கானிக் தொகுப்பு

சிம்பொனி இசைத் தொகுப்பை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தனது ஆர்கானிக் தொகுப்பை வழங்கினார். இது குறித்த தகவல்கள் காண்போம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். இதனைத் தொடர்ந்து அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார்.

மேலும், அரசியல் களத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளராகவும் தொடர்ந்து பயணித்து வருகின்றார். குமரி மாவட்டம், நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவரான அன்பழகன் சமீப காலமாக ‘ஆர்கானிக்’ (இன்றியமையாத இயற்கை உணவு) எனும் அரிய சிஸ்டத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதற்கான காரணம் என்ன? என வினவியபொழுது, “தேன் எடுத்தல்” என்பது அற்புதக்கலை. அதிலும், இந்த மனிதர்கள் தேனீக்களை கீழே இறக்கி, தேன்பாகு மாதிரி இனிப்பை வைத்து கலப்படத் தேனை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தேனீக்களையும் திருடர்கள் ஆக்கி தப்பான நோக்கத்திற்கு நிறைய இடங்களில் பயன்படுத்த தொடங்கி விட்டனர் படத்தொடங்கி விட்டனர்.

இச்சூழலில், ஒரிஜினல் தேன் எங்கே கிடைக்கும்? என ஆய்வு செய்தபோது.. மலைக்காடுகளில் கண்டுபிடித்து எனக்கு கிடைத்தது. எனக்கு கிடைத்த ஒரிஜினல் தேன் இன்பத்தை, இப்போது வழங்கி வருகிறேன்.

சுத்தமான தேனால் நூறு வகை நோயை குணப்படுத்த முடியும். குறிப்பாக, ஒரிஜினல் தேனில் பேரீச்சம் பழத்தை ஊறப் போட்டு சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்படுது, எலும்பும் பலப்படுது என பல மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது.

இந்நிலையில், ஒரிஜினல் பேரிச்சம்பழம் இங்கே கிடைக்காது, வெளிநாடுகளில் தான் கிடைக்கும் இதற்கான முயற்சியிலும் நான் இறங்கினேன். பேரீச்சம் பழமும் கிடைத்தது.

சமீபத்தில் கூட பரவலான வியாபார ஸ்தலங்களிலேயே ஏலக்காய்க்கு பச்சையை கொடுப்பதற்காக “டை” அடித்து விற்பனை செய்ததில், மக்களுக்கு விஷயம் புரிந்து வியாபாரத்தையே மூடும் நிலை ஆகியிருக்கிறது. இத்தகைய அவல நிலையை நான் விரும்பாததால், ஒரிஜினலாக மக்களுக்கு கொடுக்க விரும்பினேன். இதனால், சென்னையில் தொடங்கியது தான் “நாஞ்சில் ஆர்கானிக்”

அதாவது, உங்கள் வீட்டு சமையல் அறையில் 90 சதவீதம் பொருட்களில் சாயம் பூசப்பட்டிருக்கும். ஆனால், சாயம் பூசாத கெமிக்கல் இல்லாத இயற்கை கொடுத்ததை அப்படியே இயற்கையாகவே தருகிறேன். ஆரோக்கியமான நவதானியங்களை இயற்கையாக தருவதே எனது நோக்கம்.

பொதுவாக பாதாம் என்றால் கலிபோர்னியா. நல்ல மிளகு மற்றும் கிராம்பு என்றால் கன்னியாகுமரி; எஸ்டேட் பகுதி. இவ்வாறு முந்திரி, கற்கண்டு, கருப்பட்டி என பேர்பெற்ற இடங்களைத் தெரிவு செய்து, ஏழெட்டு பொருள்களில் சிறந்த தொகுப்பாக பையில் வைத்து கொடுக்கிறேன்.

இந்த “பை” கூட அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் இருந்து உருவாகி வந்தது. இந்தப் “பை” சுற்றுலா பயணம் உட்பட உங்களது பல்வேறு பயன்பாடுகளுக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஆரம்பமே.., டிரைலர் தான். இது, சக்சஸ் ஆகி தற்போது நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. மெயின் பிக்சர்ஸ் இனிதான். இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்து வருகிறேன்’ என்றார்.

மேலும், பி.சி.அன்பழகன் தனது திரைத்துறைப் பணி பற்றித் தெரிவிக்கையில்,

‘எஸ். எழில் இயக்கத்தில் ‘தேசிங்கு ராஜா’ படத்தில் தென்மாவட்ட பாஷை பேசும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறேன். படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வந்துவிட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸாக உள்ளது. இப்போது நான் டப்பிங் பணிக்காக கிளம்பிச் செல்கிறேன்’ என தித்திப்பு மொழியில் புன்னகை பூக்க விடை பெற்றார்.

பின்னர், டப்பிங் பணியிலிருந்து தெரிவித்த நாஞ்சில் பி.சி.அன்பழகன், ‘தேசிங்கு ராஜா-2 டப்பிங் பணிகள் நிறைவு பெற்றது. இப்படம் வசூலை மாரி போல் வாரி குவிக்கும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்தில் இசைஞானி இளையராஜா, லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி மாபெரும் வரலாற்று சாதனை படைத்தார். இச்சூழலில் சிம்பொனி ராஜாவுக்கு நாஞ்சில் பி.சி.அன்பழகன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் நேரில் சென்று, தனது ஆர்கானிக் தொகுப்பு வழங்கி வணங்கினார்.

'தேசிங்கு ராஜா'desinguraja movieIlaiyaraajasymphonyஇளையராஜா