நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38 லட்சம் மோசடி முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே ப்ரொஃபைல் (DP)-ஐ போலியாக பயன்படுத்தி, வட மாநிலத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன ஊழியரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, தயாரிப்பாளர் போல பேசி ரூ.38 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடி முயற்சியைத் தொடர்ந்து, ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.