Browsing tag

Ilaiyaraaja

இளையராஜாவின் இசை குறித்து, ஏ.ஆர்.ரகுமான் கருத்து..

இசைஞானி இளையராஜாவின் பொன்விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இளையராஜா பங்கேற்று சிறப்பித்தார். அவரது சிம்பொனி இசையும் அரங்கேற்றப்பட்டது. இதனையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் பேசியதாவது, ‘இசை உலகில் தமிழுக்கும் […]

என்ன சொல்வதென்றே தெரியவில்லை: இளையராஜா நெகிழ்ச்சி..

இசைஞானி இளையராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இளையராஜா பல்​வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்பட்ட பாடல்​களுக்கு இசையமைத்​துள்​ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்​கிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு அவருக்கு பாராட்டு விழாவை நடத்தியது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும், தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி […]

தனுஷின் ‘மறக்க முடியாத நினைவலைகள்’: வைரலாகும் நிகழ்வு..

பன்முகத்திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் முன்னதாக, நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான படம் அவதாரம். 1995-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேவதி. இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் வந்த ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை ஜானகியுடன் சேர்ந்து பாடினார் இளையராஜா. இளையராஜா, ஜானகி பாடிய அந்த பாடல் இன்றும் பிரபலம். […]

இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம்: கங்கை அமரன் விளக்கம்..

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் தெரிவிக்கையில்,’ கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால், அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ […]

கார்த்திக்ராஜா என் நண்பர்: நடிகை வனிதா விளக்கம்..

மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் அவரின் படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சிவராத்திரி தூக்கம்’ என்ற பாடலை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார் இசைஞானி இளையராஜா. இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார் கண் கலங்கியபடியே ‘தான் இளையராஜா குடும்பத்தில் ஒருவள்’ என்றார். மேலும், அந்த குடும்பத்துக்கு மருமகளாக வேண்டியவள் என வனிதா கூறினார். அதை கேட்டவர்களோ, ‘இளையராஜா குடும்பத்து மருமகள் என்றால் கார்த்திக் ராஜாவுக்கு உங்களை மனைவியாக்க நினைத்தாரா இசைஞானி? […]

நடிகை வனிதா நடித்துள்ள திரைப்படம் மீது, இளையராஜா வழக்கு..

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இளையராஜா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நான் இசையமைத்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது..’ பாடல் இடம்பெற்றுள்ளது. […]

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்: வைரமுத்து ஆதங்கம்

‘செல்வம் பொதுவுடைமை ஆகவில்லை; அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே’ என அகமகிழ்ந்துள்ளார் வைரமுத்து. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக பழைய பாடல்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்து அல்லது அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். அந்தந்த பாடல்களின் இசையமைப்பாளர்கள் அல்லது பாடல் உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெற்று, பயன்படுத்தும் பொழுது பிரச்சினை எழுவதில்லை. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும் பொழுது அது காப்பிரைட்ஸ் பிரச்சினையாக எழுகிறது. சில […]

இன்று இளையராஜா பிறந்த நாள்; இந்நாளிலும் அவரை சீண்டலாமா?

‘இசைஞானி’ இளையராஜா சுமார் 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1,500-க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையையும் இளையராஜா பெற்றுள்ளார். இளையராஜா திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும், லண்டனில் அவர் சிம்பொனி இசையமைத்ததை பாராட்டியும் தமிழக அரசு சார்பில் இன்று (ஜூன் 2) பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பாராட்டு விழா […]

கங்கை அமரன் தெரிவித்த கருத்துக்கு, அனுராக் காஷ்யப் வரவேற்பு..

இன்றைய திரைப்பாடல்கள் பற்றி அனுராக் பேசிய மனக்குறை காண்போம்.. பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது வெளிவரும் பாடல்கள் பற்றி இவர் தெரிவிக்கையில், அனிருத்தையும் கிண்டலடித்துள்ளார் என்றே தெரிகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும், நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ படத்தில் பாசமான அப்பா-மோசமான வில்லனாகவும் அனுராக் நடித்திருந்தார். அனுராக் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் தெரிவிக்கையில், ‘பான் இந்திய படங்கள் என்பதே ஒரு […]