கார்த்திக்ராஜா என் நண்பர்: நடிகை வனிதா விளக்கம்..

மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் அவரின் படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘சிவராத்திரி தூக்கம்’ என்ற பாடலை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார் இசைஞானி இளையராஜா.

இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார் கண் கலங்கியபடியே ‘தான் இளையராஜா குடும்பத்தில் ஒருவள்’ என்றார். மேலும், அந்த குடும்பத்துக்கு மருமகளாக வேண்டியவள் என வனிதா கூறினார். அதை கேட்டவர்களோ, ‘இளையராஜா குடும்பத்து மருமகள் என்றால் கார்த்திக் ராஜாவுக்கு உங்களை மனைவியாக்க நினைத்தாரா இசைஞானி? என வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் கூறியிருப்பதாவது, ‘கார்த்திக் ராஜா என் நண்பர். அவரின் மனைவி எனக்கு நல்ல தோழி. தயவு செய்து அவரின் பெயரை இதில் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ராஜா அப்பா எனக்கு கடவுள் மாதிரி. ஆமாம், நான் அவர் குடும்பத்து பெண் போன்றவள் தான். அப்படித் தான் அந்த குடும்பம் என்னை நடத்துகிறது’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார்கள் வனிதா விஜயகுமாரும், அவரின் மகள் ஜோவிகாவும். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் வனிதா. இசைஞானியை நேரில் சந்தித்து அப்பா உங்கள் பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் என கூறினாராம் வனிதா. அவரும் சரி என்று சொன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

karthik raja is my best friend from vanitha vijayakumar speech

actress vanitha vijayakumarIlaiyaraajaMusicகார்த்திக் ராஜாவனிதா விஜயகுமார்