இளையராஜா- ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்
இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா திரையுலகில் தனது 50வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இருவரும் இணையும் 25வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக இயக்குநர் காசிமாயன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுத, வசனத்தை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் […]