விஜய் த்ரிஷா குறித்து தெரிந்துதான் பேசினேன்.. சமுத்திரக்கனி ஓபன்

வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும்… அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தார்.

எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொரு விஷயம் பேசும் பழக்கம் இல்லை. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் – அது எப்படி இருக்கிறதோ அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்.

அந்த வீடியோவுக்கு மானே தேனே சேர்த்து, நம்ம தம்பிகள் வேறு விதமாக பரப்பிட்டாங்க. ஆனால் அதைக் குற்றமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை; அதைப் பற்றி பேசிவிட்டு வருத்தப்படவும் இல்லை.

அது ஒரு அக்கறை… ஒரு வலி… என் மனதில் தோன்றியதை தான் நான் சொன்னேன்.

நடிகர் விஜய் தொடர்பான விவகாரம் குறித்து பேசியதற்கான விளக்கமாக, நடிகர் சமுத்திரக்கனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Samuthirakanitrishavijayசமுத்திரக்கனித்ரிஷாவிஜய்