விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது,
‘எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண அழைப்புகள் வருகிறது.
என் தொழில் வாழ்க்கைக்காக நான் நிறைய இழந்து விட்டேன். காதலுக்காவும் நிறைய விட்டுவிட்டேன். இரண்டிலும் ரொம்ப கற்றுக் கொண்டேன். தகுதியான ஒருவரை கண்டுபிடிக்கும் வரை திருமணத்திற்கு காத்திருக்கிறேன். என் வயதில் பாதி பேர் டேட்டிங் அழைத்து செல்ல விரும்புகிறார்கள். ஒரு ஆண் மனரீதியாக முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
முனி, சக்கரகட்டி, காளை, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா, பேட்டாராப், உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே அணியும் உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வேதிகா கூறும்போது, ‘பொதுவாகவே நடிகை என்றாலே எளிதில் விமர்சித்து விடுகிறார்கள்.
கவர்ச்சியாக உடை அணிந்தாலே போதும். ‘அப்படியா…’ என்று பேச தொடங்கி விடுகிறார்கள். உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் போக்கு மாறவேண்டும்.
நான் கூட அவ்வப்போது பிகினி அணிகிறேன். விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படவில்லை. நான் யாரென்று எனக்கு தெரியும். தவறான புத்தி கொண்டவர்கள் மாறினால் நல்லது’ என்றார்.