Browsing tag

culture

விவசாயிகளை இந்த சமூகம் கவனிப்பதில்லை: கார்த்தி பேச்சு..

கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சர்தார்-2, ‘மார்ஷல்’ படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், விவசாயத் துறைக்​காக உழைக்​கும் மனிதர்​களை​யும், அமைப்​பு​களை​யும் கவுர​வித்து அங்​கீகரிக்​கும் உழவன் ஃபவுண்​டேஷனின் ‘உழ​வர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னை​யில் நடை​பெற்​றது. இந்த விழா​வில் நடிகரும் உழவன் ஃபவுண்​டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவ​தி, கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்​டனர். பேராசிரியர் சுல்​தான் அஹ்மது இஸ்​மா​யில், அனந்து […]

பிரபல நடிகரின் பேச்சுக்கு, பாடகி சின்மயி கடும் கண்டனம்..

தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தண்டோரா’ படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் பேசுகையில், ‘பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு, முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, […]

ரவிமரியா இல்ல மணவிழா: நாஞ்சில் பி.சி.அன்பழகன் பகிர்ந்த பண்பாட்டு நிகழ்வு..

இருமனம் ஒருமனமாகும் நறுமண நிகழ்வே திருமணம். இத்தகு திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. இயக்குநரும் நடிகருமான ரவிமரியாவின் மகள் லிஸி-இன்பேன்ட் பிரிட்டோ திருமணம் இனிதாய் நடைபெற்றது. திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள், இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் மற்றும் இயக்குநர்கள் எஸ்.எழில், ஆர்.கே. செல்வமணி இவர்களுடன் லியாகத் அலிகான், மன்சூர் […]

நடிகைகள் அமிஷா படேல் காத்திருப்பு; வேதிகா ஆத்திரம்..

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘எனக்கு பொருத்தமான ஹீரோ இன்னும் என் அருகில் வந்ததில்லை. திருமணம் செய்ய வரும் இளைஞர்கள் எல்லாரும் என்னை விட பாதி வயசு. இவர்களிடம் இருந்து தான் அதிக திருமண அழைப்புகள் வருகிறது. என் தொழில் வாழ்க்கைக்காக […]

ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..

ஆஸ்​திரேலி​யா​வின் விக்​டோரியா மாகாண மலை​யாளி​கள் கூட்டமைப்பு சார்​பில், கடந்த 6-ம் தேதி மெல்​போர்ன் நகரில் ஓணம் பண்​டிகை கொண்​டாடப்பட்​டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தின​ராக பங்​கேற்றார். இவ்விழா​வில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்​போர்ன் நகருக்கு விமானத்​தில் சென்றார். அப்​போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பை​யில் எடுத்​துச் சென்​றார். மெல்​போர்ன் விமான நிலை​யத்​தில் நவ்​யா​வின் உடைமைகளை அந்த நாட்டு அதி​காரி​கள் சோதனை செய்​தனர். அப்​போது அவரது கைப்​பை​யில் ஒரு முழம் மல்​லிகை பூ […]

வலைத்தளங்களில் நிறைய மனநோயாளிகள்: இயக்குநர் தங்கர்பச்சான் சாடல்..

வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். விகே புரொடக் ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணன்ராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுஷ்மா சினிஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை செப்.19-ல் வெளியிடுகிறார். படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர் ஏகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தங்கர் பச்சான் பேசும்போது, ‘இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள், தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் […]

மேடையில் ரசிகைகளுக்கு உதட்டில் முத்தம்: பாடகர் உதித் நாராயண் செயல் சர்ச்சையானது

உதித் நாராயண், மேடையில் நடந்து கொண்ட நிகழ்வு சர்ச்சையாகி உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. பின்னணி பாடகரான உதித் நாராயண், பல மொழிகளில் பாடி இருக்கிறார். மேலும், பத்ம பூஷண், லதா மகேஷ்கர் விருது, பத்மஸ்ரீ என பல உயரிய விருதுகளை பெற்றிருக்கும் இவர், தமிழில் அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா என பல பாடல்களை பாடியுள்ளார். இவர், நேரலை நிகழ்ச்சியில் ‘டிப் டிப் பர்சா பானி’ என்ற […]

‘மாமன்’ படத்தில் சூரிக்கு தங்கையாக சுவாசிகா கமிட்..

‘தங்கை மேல அண்ணனுக்கு அளவு கடந்த பாசமுங்க, ஆஸ்தி உசிரு ஆவியெல்லாம் அவதாங்க, அப்டி ஒரு சென்டிமென்ட் கதைங்க’ அண்ணன் சூரி, தங்கச்சியா யாரை கமிட் பண்ணலாம்? வாங்க பார்க்கலாம்.. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடி செம ரீச் ஆனதால், சூரிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இதனையடுத்து, சூரியை ஹீரோவாக ‘விடுதலை’ படத்தின் மூலம் களத்தில் இறக்கிவிட்டார் வெற்றிமாறன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிட்டியது. இதனால், இப்படத்தின் […]

ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின் கதையை உணர்வுபூர்வமாக பேசியது. இந்த படத்தை இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் டேனி பாய்ல் இயக்க, இந்திய நடிகர்களான தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அற்புத படைப்பான இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. […]