கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில், உருவான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது.
ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது காதலும் காதல் சார்ந்த மோதலும் கலந்த கதையாகும். இந்தப் படம் குறித்து தனுஷ் கூறும்போது,
‘காதல், மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று நினைக்கிறேன்’ என்றார். தனுஷின் பதிலால் ஆச்சரியமடைந்த செய்தியாளர்கள், கீர்த்தி சனோனிடம் கேட்டனர். அவர் சிரித்தபடி, சங்கர் (தனுஷ் கதாபாத்திரம்) எனது பதிலுடன் உடன்படாமல் இருக்கலாம் என்றவர், ‘நான் காதலை முழுமையாக நம்புகிறேன். உண்மையான மற்றும் ஆழமான காதலுக்கு பல வரையறைகள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், நீங்கள் காதலுக்காக மாற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தயக்கமின்றி ஒருவருடன் சிரிக்க முடிந்தால் அதுதான் காதல் என்பது என் கருத்து’ என்றார்.
அவ்வகையில், காதலைப் பற்றி தனுஷின் புரிதலுக்கும், கீர்த்தியின் புரிதலுக்கும் வேறுபாடு வெளிப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது குறித்து இணையவாசிகள் விவாதிப்பது தற்போது தொடர்கிறது.