பாலிவுட் நடிகையான நோரா படேஹிக்கு கார் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்
சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெளியான பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலில் டான்ஸ் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மும்பையில் கார் விபத்தில் சிக்கியுள்ளார் நல்வாய்ப்பாக இவருக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லாமல் உயிர்த்தப்பியுள்ளார் விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் இவர் தற்போது காஞ்சனா போர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.