ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீலீலா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகை படத்தின் நட்சத்திரப் பட்டியலை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். முன்னணி கலைஞர்களின் கூட்டணியில், பிரம்மாண்டமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இப்படம் உருவாகி வருகிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வருவதால், ‘தர்மன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Actress Sreeleela Joins Rajinikanth’s DharmanDharmanRajinikanthSreeleela