திரையுலகப் பிரபலங்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி சிறப்புப் பரிசுகள் இந்த ஆண்டும் வழக்கம்போல் வழங்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி எஸ். தாணு, உலகநாயகன் கமல்ஹாசன், மகேந்திரன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் தீனா, இயக்குநரும் தயாரிப்பாளருமான பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நேரில் சென்று திரையுலகப் பிரபலங்களுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் தீபாவளி சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.

சங்க உறுப்பினர்களுடன் பண்டிகை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்தது.

KamalTamil Film Producers Council Distributes Diwali Special Gifts to Prominent Film Industry Personalities