தலைவருக்காக ஒரு மாதம் கொண்டாட்டம்… ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அழைப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “வாழ்நாள் முழுவதும் தலைவரின் ரசிகனாக இருந்து வருகிறேன். 75 வயதிலும் அவர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

தலைவரின் 76-வது பிறந்தநாளையும், அவரது மாபெரும் வெற்றியையும் இணைத்துக் கொண்டாடும் வகையில், நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் முழுவதும் கொண்டாட்டங்களை நடத்த விரும்புகிறேன்.

- Advertisement -

தலைவரை நேரில் அழைத்து, அவர் முன்னிலையில் இந்தக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், எளிமையையும் அடக்கத்தையும் விரும்பும் அவரது குணத்தை அறிந்திருப்பதால், ரசிகர்களாகிய நாமே நமது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்தக் கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறோம்.

சிறுவயது முதலே தலைவரின் தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். இன்று நான் இந்தத் துறையில் இருப்பதற்கும், எனக்குக் கிடைத்த அனைத்திற்கும் அவரே காரணம். அவரைப் போன்ற ஒரு நட்சத்திரம் இனி உருவாகப் போவதில்லை. இந்த ஆண்டு தலைவரின் ரசிகர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமையப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.

raghava lawrenceRaghava Lawrence Invites Fans to Join the FestivitiesRajinikanth