‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்..
விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில்,
‘வீர தீர சூரன்-2’ படத்தின் கதை விக்ரம் சாருக்காக எழுதவில்லை. முதன் முதலில் விக்ரம் சாரிடம் கதை சொல்ல சென்றபோது, நான் அவரிடம் உங்களுக்காக இந்த கதை எழுதவில்லை சார் என்றே தெரிவித்தேன். படத்திற்கான 20 நிமிட கதையை மட்டும் அவரிடம் கூறினேன். அது அவருக்கு பிடித்து போனது.
மீதமுள்ள கதையை எழுதிவிட்டு வாருங்கள். நானும் ‘சித்தா’ படத்தை பார்த்து விடுகிறேன்’ என்றார். ‘சித்தா’ படத்தை பார்த்த விக்ரம் சார் உடனே என்னை தொடர்பு கொண்டு, வீர தீர சூரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த கதைக்குள் விக்ரம் சார் வர நினைத்ததால், நான் இயல்பாக இப்படத்தை எடுத்துள்ளேன். விக்ரம் சார் அணுகுமுறையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என பெருமிதமாய் அருண்குமார் கூறியுள்ளார்.