வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் “மீடியா’ பற்றி பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து பற்றிப் பார்ப்போம்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இப்படமும் பயோபிக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் எனக்குள் என்னிடம் ஏற்பட்ட மாறுதலை புரிந்துகொள்ள முடிகிறது.
சமூக வலைதளங்களில் அவரவர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவார்கள். அதனால், சில சமயங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் நான் குழம்பி விடுகிறேன்.
தற்போது சோசியல் மீடியா பயன்படுத்துவதை நிறுத்தியதில் இருந்து, எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பதாக நான் உணர்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தாலும், ‘வெற்றி பெறுவதற்கு சோஷியல் மீடியாவை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து அமைகிறது. அதற்காக, ‘மீடியாவை முறித்துக் கொண்டதால் வெற்றி வந்தது என்பது நகைப்புக்குரியது’ எனவும் இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருவது வைரலாகி வருகிறது.