இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும் இயக்குநர் ராமின் புதிய படைப்பான இதில், நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார். அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அஞ்சலி கதாநாயகியாக இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு இயக்குநர் ராமின் நீண்டநாள் கூட்டாளியான யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் நிவின் பாலியின் வித்தியாசமான தோற்றமும், சூரியின் ஸ்டைலான லுக்கும், இருவரும் இடம்பெறும் ரயில் பயணக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, சமீபகாலமாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரியின் நகைச்சுவை பக்கம் இந்தப் படத்தில் மீண்டும் இடம் பெற்றிருப்பதை டீசர் உணர்த்துகிறது. அதேசமயம், இயக்குநர் ராம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் ரசிகர்களை புதிய அனுபவத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

படம் ஏற்கனவே தயாராகி, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது. அந்தப் பெருமையுடன், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1 முதல் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.

Anjalidirector ramNivin PaulySooriYezhu Kadal Yezhu MalaiYezhu Kadal Yezhu Malai Release Date AnnouncedYuvan Shankar Raja