மக்களோடு ஒருவனாய் படம் பார்த்தேன்: சிவகார்த்திகேயன் பேச்சு..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தினை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் சிவகார்த்திகேயன், ருக்மணி, அனிருத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். படம் முடிந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது சிவகார்த்திகேயன், ‘மக்களோடு படத்தைப் பார்த்தேன். அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் கதை அவ்வளவே. மக்கள் எந்தக் காட்சியை எல்லாம் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவே நானும், அனிருத்தும் திரையரங்கிற்கு வந்து பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்த அனைத்து […]