Browsing tag

amaran movie

தனுஷுக்கு ஜோடியாக மீண்டும் சாய் பல்லவி..

‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் தனுஷ். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. அவரது முந்திய வெற்றிப் படமான […]

கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்படங்கள், ரஜினிக்கு கவுரவிப்பு..

கோவாவில் இன்று 20-ந்தேதி வியாக்கிழமை 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்குகிறது. இந்த விழா வரும் 28-ந்தேதி வரை நடைபெறும். இப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். தொடக்க விழாவில் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்ற படம் திரையிடப்படுகிறது. 1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான […]

தனுஷின் 55-வது படக்கதை என்ன?: இயக்குனர் ராஜ்குமார் அப்டேட்

தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் கதை குறித்து காண்போம்.. சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது படத்தை இயக்க உள்ளார். தற்போது தனுஷ், பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேய்ன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்பட பணிகள் முடிந்ததும் ராஜ்குமார் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் தெரிவிக்கையில், ‘தனுஷ் 55’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்னும் […]

இரவு 9 மணிக்கு மேல் தொடரும் எனது நல்ல பழக்கம்: சாய் பல்லவி லைஃப் ஸ்டைல்..

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பழக்கம் உண்டு. அதில், மலர் டீச்சரின் பழக்கம் பார்ப்போம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன், மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘தண்டேல்’ படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் சாய் பல்லவி ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்திலும், அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். சம்பள விஷயத்திலும் தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, சமந்தாவை ஓவர் டேக் செய்து ரூ.15 கோடி வாங்குவதாக […]

“மீடியாவை மறந்தேன்” சிவகார்த்திகேயன் பேச்சுக்கு, நெட்டிசன்ஸ் கருத்து வைரலாகிறது

வெற்றியின் உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் “மீடியா’ பற்றி பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே நடித்து வருகிறார். இப்படமும் பயோபிக் திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்ததாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக நான் சமூக வலைத்தள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் […]

தளபதி விஜய்யின் கடைசிப்படம் ஓடிடி.யில் விலை போகுமா? வெயிட்டிங்..

வீட்டுக்கொரு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, ஓடிடி.தளம் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது குறித்த விவரம் வருமாறு: தியேட்டர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் போல ஓடிடி.யில் வெளியாகும் படங்களுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி. விலைபோக விரும்புகின்றன. பொதுவாக, குடும்ப பட்ஜெட் காரணமாகவும், சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது குடும்பத்தோடு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலை தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட […]

அமீர்கான் தயாரிக்கும் படத்தில், அவரது மகனுக்கு ஜோடியாகிறார் சாய்பல்லவி..

மலர் டீச்சராக ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகி, பாலிவுட் வரை வளர்ந்த சாய்பல்லவி பிஸி ஷெட்யூல் குறித்து பார்ப்போம் வாங்க.. சாய் பல்லவி ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகளையும் பெற்றார். அதில், சிவகார்த்திகேயனுடன் ‘அமரன்’ படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். தற்போது, நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ படத்திலும், பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கும் ‘எல்லம்மா’ படத்தில் […]

விஜயை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்..என்ன விஷயம் தெரியுமா?

விஜயை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயனும் சாய் […]

பொய்யான செய்திகள் வந்தால், இனிமேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சாய் பல்லவி ஆவேசம்

‘இனிமேல், வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என நடிகை சாய் பல்லவி ஆத்திரமடைந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் செம பிஸி. குறிப்பாக இவர் நடித்த ‘மாரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல், யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்கிற சாதனையையும் படைத்தது. மேலும், சிவகார்த்திகேயன் […]

அமரன் : ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் கொடுத்த கதாபாத்திரத்தில் […]