ஜீவாவின் “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற பூஜை விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன்

இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட கதை

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரையை பின்னணியாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘கிடா’ திரைப்பட இயக்குநர் ரா. வெங்கட், இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை மேற்கொள்கிறார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பத் திரைப்படமாக உருவாகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு, K.B. நந்தபாலன் கலை இயக்கம், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகள், M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பை கவனிக்கின்றனர்.

ஒலிப்பதிவை T. உதய் குமார், ஸ்டில்ஸ் புகைப்படங்களை அன்பு, நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை Think Music கைப்பற்றியுள்ளது.

ஒரே கட்டமாக நடைபெறும் படப்பிடிப்பு

பூஜையுடன் தொடங்கியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

வலுவான கதைக்களம், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் திறமையான நடிகர்கள் இணைந்துள்ள ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

JiivaJiiva’s Thagappan Goes on Floors with Pooja CeremonyThagappan