இளையராஜா இசையமைப்பில் உருவாகும் தட்டுவண்டி!

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’… இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!

சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்தப் படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசுகளின் விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தனது முந்தைய வெற்றியைத் தொடர்ந்து, புதிய கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் வகையில் ‘தட்டுவண்டி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

படத்தின் தொழில்நுட்பப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இளையராஜாவின் இசை மற்றும் படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

IlaiyaraajaIlaiyaraaja Composes Music for ThattuvandiThattuvandi